World

July 29, 2022
பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்!
ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கு இருந்திருக்கவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ... Read More »
July 29, 2022

July 26, 2022
பாகிஸ்தானில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!
பாகிஸ்தானில் மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில், மகப்பேறு வார்டுகள் மற்றும் குழந்தைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன, மேலும் ஒரு படுக்கையில் நான்கு குழந்தைகள் இருப்பதாக வெளிநாட்டு அறிக்கைகள் கூறுகின்றன. கர்ப்பகால வார்டுகளில் ஒரு படுக்கையில் இரண்டுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் ... Read More »
July 26, 2022

July 25, 2022
குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு
இந்திய,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை அடுத்து பாரம்பரிய முறைப்படி திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
July 25, 2022

July 19, 2022
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
மீண்டும்,ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் தெற்கே 137 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.40 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 170 கி.மீ. ஆழத்தில் ... Read More »
July 19, 2022

July 18, 2022
இங்கிலாந்தில் அவசரநிலை பிரகடனம்!
இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை , அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்திலும் வெப்பம் அதிகம் காணப்படும் என்றும், அதிகபட்சமாக நகர்ப்புறங்களில் வெப்ப நிலை ... Read More »
July 18, 2022

July 15, 2022
டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். நியூயார்க் காவல்துறையின் அவசர உதவி ... Read More »
July 15, 2022