Header

Local News

June 27, 2022

எரிபொருளுக்கு டோக்கன்!

எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன்கள்  வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு முப்படையினரால் தயாரிக்கப்பட்ட டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

June 27, 2022


June 25, 2022

நாட்டில் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

  இலங்கையில் தற்போது, சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும் 163 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு ... Read More »

June 25, 2022



June 25, 2022

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 01 ஆம் திகதிவரை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான அறிவிப்பு!

  எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை ... Read More »

June 25, 2022


June 24, 2022

யுக்ரைன் மற்றும் மோல்டோவா முதலான நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது!

யுக்ரைன் மற்றும் மோல்டோவா முதலான நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்ளஸ் மைக்கல் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய உங்களது பாதையில், இன்று ஒரு முக்கியமான படிநிலையைக் குறிக்கிறது. ஐரோப்பிய சபையின் இந்தத் தீர்மானம் வரலாற்றுத் தருணமாகும் என்றும் அதன் தலைவர் ... Read More »

June 24, 2022


June 24, 2022

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மாகும்புர, மாத்தறை மற்றும் பூகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மாகும்புர பகுதியைச் சேர்ந்தவரிடமிருந்து 1,350 லீற்றர் டீசலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மாத்தறையில் கைது ... Read More »

June 24, 2022


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo