Local News

June 28, 2022
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
June 28, 2022

June 28, 2022
பேருந்து கட்டணம் தொடர்பான தீர்மானம்!
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டணங்கள் தொடர்பில் இன்று (28) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் தெரிவித்திருந்தன. அந்த வகையில் இன்று போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் ... Read More »
June 28, 2022

June 28, 2022
இலங்கை போக்குவரத்து சபையின் அறிவிப்பு!
நாட்டில் போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகளால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
June 28, 2022

June 28, 2022
ரயில் போக்குவரத்து குறித்தான அறிவித்தல்!
இன்றைய தினம் வழமையான கால அட்டவணையின் கீழ் ரயில்கள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மாத்திரம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, துறைமுகங்கள், சுகாதாரத் துறை, அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் விவசாயப் பொருட்களின் போக்குவரத்து போன்ற ... Read More »
June 28, 2022

June 27, 2022
எரிபொருள் தொடர்பில் கலந்துரையாட கட்டார் பயணிக்கிறார் கஞ்சன விஜேசேகர!
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) இரவு கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டுக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
June 27, 2022

June 27, 2022
அக்குரஸ்ஸ பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு!
அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வளா கங்கையில் வீசியுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் ... Read More »
June 27, 2022