Header

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்!

 

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக சட்டமா அதிபர் இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை முடித்து உண்மைகளை முன்வைப்பதற்கான திகதியை வழங்குமாறு அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு அரசாங்க சட்டத்தரணிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் எரிந்த கப்பலின் ரஷ்ய கப்டன் மற்றும் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி, நிறுவனத்தின் 04 பணிப்பாளர்கள் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.