
நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமானம் மற்றும் மீட்புப் பணியாளர்களை (first responders) நிலைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விமானப்படை தெரிவித்துள்ளது.
ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய விமானப்படை தளங்களில் இருந்து கண்காணிப்பு விமானம், ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற ரெஜிமென்ட் சிறப்புப் படைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களை வழங்குவதற்காக தற்போது தயார் நிலையில் உள்ளன.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ள நிலையில், இலங்கைக்கு கடுமையான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
floodsLandslideRescue Operationsevere weatherSouthwest MonsoonSri Lanka Air Force