Header

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 50 பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின பேரில்,  சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர் இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, 50 பேர் தொடர்ந்தும் பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தற்போதைய நாட்டின் எரிபொருள் சூழ்நிலை காரணமாக நீதிமன்றிற்கு அழைத்து வரமுடியாததையிட்டு நீதவான் கணொளி மூலம் எதிர்வரும் 9ம் திகதிவரை 50 போரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo