
எரிபொருள் நெருக்கடியை பொருட்படுத்தாது டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடரும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேயர் இதனை தெரிவித்துள்ளார்.
புகைபிடிக்கும் இயந்திரங்களுக்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருப்பதால், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேயர் உறுதியளித்துள்ளார்.
கொவிட் -19 க்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மேயர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல், கைகளை நன்கு கழுவுதல் மற்றும் கை சுத்திகரிப்பை பயன்படுத்துதல் போன்ற கொவிட்-19 நெறிமுறைகள் தொடர வேண்டுமெனவும் மேயர் வலியுறுத்தியுள்ளார்.
Dengue preventionFuel crisisRosy SenanayakeWearing a face mask