Header

ஹட்டன் – எம். ஆர். நகர் எரிபொருள் நிலைய வளாகத்தில் அமைதியின்மை!


ஹட்டன் – எம். ஆர். நகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இன்று முற்பகல் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு 3 நாட்களுக்கு பின்னர் இன்றைய தினமே பெற்றோல் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், அதனை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 3 நாட்களுக்கு மேலாக மக்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பிரவேசித்த சிலர் பெற்றோலை பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு அமைதியின்மை நிலவியதோடு, காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் தலையீட்டில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.