
களுத்துறை, கல்பத்த – படகொட பிரதேசத்தில் 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம பிரதேசத்தில் வசித்துவந்த 63 வயதுடைய இந்நபர் தனியார் இறப்பர் சேகரிப்பு நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நபர், 05 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்த நிலையில், அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.