
கண்டியில் இருந்து கொழும்புக்கு வந்த கடுகதி தொடருந்து ஒன்று ரம்புக்கனை – கடிகமுவவுக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மலையகத்திற்கான தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நாளை முதல் சகல தொடருந்து சேவைகளும் வழமைப்போல் இடம்பெறும் என தொடருந்து போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தை போன்று இன்றும் 125 தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக நீண்ட தூர தொடருந்து சேவைகளில் மட்டக்களப்பிற்கான தொடருந்து இன்று காலை 6.05 க்கு பயணத்தை ஆரம்பித்தது.
இரவு 7 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி செல்லும் கடுகதி தொடருந்து சேவையும் இடம்பெறும். அத்துடன், சகல இரவு நேர தொடருந்து சேவைகளும் இன்று முதல் வழமைப்போல் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.