Header

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

 

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 230 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் மாத்திரம் இதுவரை கைது செய்யப்படாமை கண்டனத்திற்குரிய விடயமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

 


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo