Header

இந்தியாவின் மறுப்பு செய்தி!

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியதா?

இந்த கேள்விக்கு இந்தியா, தனது பதிலை வழங்கி உள்ளது.அதில்

உயர் ஸ்தானிகராலயம் கடந்த சில நாட்களாக, அதன் விசா பிரிவு ஊழியர்கள், அவர்களில் பெரும்பாலோர் இலங்கை பிரஜைகள், அலுவலகத்திற்குச் செல்ல முடியாததால், செயல்பாட்டுச் சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறியது.

எங்களது செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இராஜதந்திர தூதரகம் உறுதியளித்துள்ளது.

“இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப் போலவே இலங்கையர்களும் இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள்,” என்றும் தெரிவித்துள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo