Header

May 2022

May 16, 2022

330 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவர்கள் உற்பட 11 பேர் பலி!

  தென் அமெரிக்க நாடான பெருவில் 330 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானாதில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் படுங்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த மீட்பு பணியினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

May 16, 2022


May 16, 2022

கொட்டாஞ்சேனை பகுதியில் கத்தியில் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் படுகொலை!

  கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஆர்மர் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை ... Read More »

May 16, 2022


May 16, 2022

மலையக தொடருந்து சேவை பாதிப்பு – ஏனைய தொடருந்து சேவைகள் வழமைக்கு!

  கண்டியில் இருந்து கொழும்புக்கு வந்த கடுகதி தொடருந்து ஒன்று ரம்புக்கனை – கடிகமுவவுக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மலையகத்திற்கான தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, நாளை முதல் சகல ... Read More »

May 16, 2022


May 16, 2022

சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர்!

  சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த சமையல் எரிவாயுக்களை தரையிறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

May 16, 2022


May 16, 2022

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

  நாட்டின் பல பகுதிகளில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 230 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் மாத்திரம் இதுவரை கைது செய்யப்படாமை கண்டனத்திற்குரிய விடயமாகும் என ... Read More »

May 16, 2022


May 16, 2022

21ஆவது அரசியலமைப்பு திருத்தம்: பேச்சுவார்த்தை இன்று!

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை  இன்று  இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும். இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்படும்.

May 16, 2022


logo