Header

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தால் எரிபொருள் விலை அதிகரிப்பு!

 

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது. இதனால், உலக நாடுகளில் எரிபொருட்களின் விலை அதிகரித்துவருகிறது.

இதற்கிடையே, பெரு நாட்டிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்களின் விலையும் அங்கு அதிகரித்துள்ளது.

மேலும், பொற்றாசியம், அமோனியா, யூரியா உள்ளிட்ட விவசாய உரங்களின் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்துவந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரால் இறக்குமதி தடைபட்டு விலை அதிகரித்துள்ளது.

விலை உயர்வு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பெருவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.