Header

எதிர்வரும் ஞாயிற்று கிழமை ஊரடங்கா?

 

எதிர்வரும் 03 ஆம் திகதி ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டத்துக்கு சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸார் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை மதிப்பதாகவும், அதனால் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் எந்த தடைகளையும் பொலிசார் ஏற்படுத்தப் போவதில்லையென குறிப்பிட்ட அவர், ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் எல்லை மீறி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு சென்றால் பலப் பிரயோகம் செய்ய வேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo