
ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி அழிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனியப் படைகள் ஏற்கனவே ஜேர்மன் இராணுவமான Bundeswehr இடமிருந்து 1,000 டாங்கி அழிப்பு ஆயுதங்களையும் (Anti-Tank Weapons), 500 ஸ்டிங்கர் வகை வான்வழி ஏவுகணைகளையும் (Stinger-type surface-to-air missile launchers) பெற்றுள்ளன.
ஜேர்மனி உறுதியளித்த 2,700 ஏவுகணைகளில் இருந்து சுமார் 500 ஸ்ட்ரெலா (Strela surface-to-air missiles) ஏவுகணைகளை வழங்கியுள்ளது.