
சுகாதாரத் தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாட்டில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும்,கொவிட் தொற்றைக்கண்டறிவதற்கானபரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான ‘ரெப்பிட் அன்ரிஜன்’ கருவிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும் கூறினார்.