Header

2 இலட்சம் சீமெந்து மூடைகள் நாளை இலங்கைக்கு!

 

2 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம்(28) நாட்டை வந்தடைய உள்ளதாக, சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய 2 கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் , சந்தையில் அதிகரித்துள்ளதாக கேள்வி காரணமாக , சில பகுதிகளில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை , துறைமுக நகர் மற்றும் நகர வீடமைப்புத் திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார்த் துறை கட்டுமானப் பணிகளுக்காக அதிக கேள்வி உள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.