
காவல்துறை விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு சிகெரெட்டுகளின்மொத்த பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (12) பிற்பகல் காலி துறைமுக காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெவெட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகநபர் ஒரு தொகை சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 13,300 வரியில்லா சிகெரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், காலி துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.