
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஷிஜியாசுவாங் மாகாணத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் தனிமைப்படுத்தப்பட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளதையடுத்து கொரோனா இல்லா சீனா என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க லட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இரும்பு பெட்டிகளில் 2 வாரம் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
55 லட்சம் மக்கள்தொகை கொண்ட அன்யாங்கைத் தவிர மற்ற நகரங்களில் ஓமைக்ரான் பதிப்பு 2 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளது.
China isolates patients in large iron box camps so far ...!world