
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வு இன்றுமுதல் அமுலாகிறது. இதற்கமைய ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக , பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய , போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.