Header

ஊடகவியலாளர்களுக்கான அசிதிசி காப்புறுதி!

ஊடகவியலாளர்களுக்கான அசிதிசி ஊடகக் காப்புறுதி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் எவ்வித பங்களிப்புமின்றி இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி இதனை அரசாங்கம் தனது பொறுப்பாகவே கருதுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

எதிர்கால சமூகத்திற்கான தொழில்சார் வலுவூட்டல் மற்றும் திறைசேரியை சார்ந்துள்ள பல அரச நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக புதிய வழிகளைத் திறக்கும் வகையில் தற்போதுள்ள காலாவதியான சட்டத்தை திருத்துவதற்கு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் தான் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo