Header

திரைப்படங்களில் பெண்கள் நடிக்க தலிபான்கள் தடை…!

 

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என, தலிபான் கூறி வந்தாலும், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு மாணவியர் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை இது பெண்களுக்கு எதிரான தலிபான்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்கக்கூடாது அதாவது திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் பெண் கலைஞர்கள் இருக்கக்கூடாது.

அதேபோல் ஆண் நடிகர்களும் நிர்வாணமாக இருக்கும் வகையில் காட்சிகள் எடுக்கக்கூடாது என்றும் ஆண் கலைஞர்களின் மார்பு முதல் முழங்கால் வரை வெளியில் தெரியக்கூடாது என்பதுடன் செய்தி சனலில் வரும் பெண் பத்திரிகையாளர்கள் “ஹிஜாப்” துணியால் தலைமுடி தெரியாத அளவிற்கு மூடிக்கொள்வதுடன் வெளிநாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை ஊக்குவிக்கும் வகையிலான திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது.

இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் ஆப்கனின் மதிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுஎன்று கூறப்படுகிறது.