Header

சினிமா படப்பிடிப்பில் விபரீதம் – பெண் ஒளிப்பதிவாளர் பலி…!

 

அமெரிக்காவில் ஹாலிவுட் படப்பிடிப்பின் போது, போலி துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் தவறுதலாக சுட்டதில், பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம், சான்டா பீ நகரில் “ரஸ்ட்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் நடிகர் “அலெக் பால்ட்வின்” திரைப்படங்களில் பயன்படுத்தும் போலி துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில், எதிர்பாராத விதமாக, படத்தின் ஒளிப்பதிவாளரான “ஹலினா ஹட்சின்ஸ்” மற்றும் இயக்குனர் “ஜோயல் சோசா” ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், கவலைக்கிடமான ஹலினா ஹட்சின்சை அவசர சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டபோது அவர் வழியிலேயே மரணம் அடைந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜோயல் சோசா நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.