Header

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி தகவல்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்!

 

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை நேற்று (21) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

இந்த சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் கட்டுப்படுத்தப்படுமே தவிர, மக்கள் உரிமைகள் மீறப்படமாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார்.