Header

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்குக்கான தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, Covid தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு இளைஞர் சமூகத்தை ஊக்குவிப்பது சமூகத்தின் பொறுப்பாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

தடுப்பூசிகள் தொடர்பாக போலியான கருத்துக்கள் சமூகத்திற்கு மத்தியில் இடம் பெறுவதாகவும் அவர் கூறினார்

இவ்வாறான போலி செய்திகளை நம்பாது தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறும் அவர் நாட்டின் இளைஞர் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் 20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட 54 தசம் 9 சதவீதமானோர் இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளார்கள்.