Header

ஐ. நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்…

NEW YORK, NY - SEPTEMBER 25: The 70th Regular Session of the UN General Assembly (UNGA 70) is to be held to discuss the full spectrum of international issues such as climate agreement, Daesh attacks, Syrian civil war, refugee crisis in the Mediterranean and Aegean sea on September 25, 2015 at UN headquarter in New York. On 25 September 2015, His Holiness Pope Francis will address the UNGA. (Photo by Cem Ozdel/Anadolu Agency/Getty Images)

 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் இன்று (21) அமெரிக்காவின் நியுயோர்க்கில் ஆரம்பமாகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்தக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த வாரம் நியுயோர்க்கை சென்றடைந்தனர்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைவர்கள் மாநாட்டில் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

அத்துடன் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள உணவுக்கட்டமைப்பு கூட்டத்தொடரிலும், எதிர்வரும் 24 ஆம் திகதி எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலின் போதும், ஜனாதிபதி தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

logo