Header

எந்த தடுப்பூசி அதிக செயல்திறன் கொண்டது…!

அமெரிக்காவில் “டெல்டா” உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘டெல்டா’ கொரோனா உச்சத்தில் இருந்த ஜூன், ஜூலை, மற்றும் ஓகஸ்ட் காலப்பகுதியில் 32 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் மற்றவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மருத்துவமனை அல்லது தீவிர சிகிச்சையில் அனுமதிப்பதற்கு 5 தொடக்கம் 7  மடங்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் டெல்டாவுக்கு எதிராக மொடேர்னா தடுப்பூசி 95% வீதமும் பைசர் தடுப்பூசி 80% வீதமும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி 60% வீதம் செயல்திறனுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo