Header

நாய்க்கு ஐசிசி விருது!

ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதோடு மாதத்தின் சிறந்த நாய் என்ற ஒரு விருதையும் ஒகஸ்ட் மாதத்தில் சேர்த்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒகஸ்ட் மாத சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட மகளிர் கிரிக்கெட்டில் அயர்லாந்தின் ஈமியர் ரிச்சர்ட்சன் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் இவர்களோடு புதிதாக ஒரு ஜீவனும் ஒகஸ்டின் சிறந்த விருதை பெற்றது. அனைத்து அயர்லாந்து டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் மைதானத்திற்குள் ஓடிவந்த நாய்க்கும் சிறந்த நாய் விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டியின் போது இந்த நாயின் பீல்டிங் முயற்சியை பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அயர்லாந்து கிரிக்கெட்டில் இந்த நாய்தான் சிறந்த பீல்டர் என்று வர்ணிக்கப்பட்டது.

 

logo