Header

அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை – நிபுணர்கள் எச்சரிக்கை…!

 

அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கொவிட் அலை விரைவாக உச்சம் அடைவதால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“ஜான் ஹாப்கின்ஸ்” பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் “பக்தி ஹன்சோதி” தெரிவித்து  உள்ளதாவது அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் திகதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 இலட்சமாக பதிவாகியுள்ளதுடன் தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்த தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள

1 இலட்சத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே மக்கள் கவனக்குறைவாகவோ அலட்சியமாகவோ இருக்க வேண்டாம் என் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

logo