Header

ஆப்கானிஸ்தானுக்கு உலக நாடுகள் 9000 கோடி நிதியுதவி…!

 

ஆப்கானிஸ்தான் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக, உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தற்போது அமைந்துள்ள ஆட்சியில், கடுமையான உணவுப்பஞ்சம் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையம் மற்றும் ஆப்கன் – பாக். எல்லை ஆகியவற்றில் கூடியுள்ளனர்.

இது தவிர ஏராளமானோர், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் தங்கும் இடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியுள்ளது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் மக்களின் துயரம் குறித்து ஆராய சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆப்கானிஸ்தானில் 1.10 கோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, ஐ.நா. அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில் 4,750 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாகவும், இது தவிர ஆப்கானிஸ்தான் மக்களின் துயர் தீர்க்க, உறுப்பு நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

logo