Header

மேலும் 733 பேர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் கைது !

 

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 71, 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 124 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

logo