Header

கட்டுப்பாடுகளுடன் பெண்கள் படிக்கலாம் – தலிபான் அமைச்சர் அறிவிப்பு…!

 

பல்கலைக்கழகங்களில் பெண்கள் மேற்படிப்பு படிக்க தடை ஏதும் இல்லை என்றும் ஆனால் ஆண்களுடன் சேர்ந்து படிக்க பெண்களுக்கு அனுமதி இல்லை.

மற்றும் இஸ்லாமிய பாரம்பரிய உடையை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என ஆப்கானிஸ்தான் உயர் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள “அப்துல் பாகி ஹக்கானி” தெரிவித்தார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசின் செயல்பாடுகளை அனைத்து நாடுகளும் கண்காணித்து வருகின்றன.

கடந்த 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2001 ஆம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பிற்போக்குத்தனமான விதிகளை வகுத்தனர்.

குறிப்பாக பெண்கள் படிக்கவும், ஆண் துணைஇன்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் இசை, நடனம் போன்ற கலைகளுக்கு தடை போடப்பட்டது. இந்த முறை அவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம் என தலிபான்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் உயர் கல்வித் துறை அமைச்சராக தெரிவாகியுள்ள “அப்துல் பாகி ஹக்கானி” கூறியதாவது, நாட்டை 20 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல தலிபான்கள் விரும்பவில்லை.

இன்றைக்குள்ள வளர்ச்சியின் அடிப்படையில் நாட்டை கட்டமைக்கவே விரும்புகிறோம். மற்றும் பல்கலை சென்று படிக்க பெண்களுக்கு தடை இல்லை, ஆனால் அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

தலையில் இருந்து கால் வரை மறைக்கும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்.

ஆண்களும், பெண்களும் இணைந்து படிப்பதை அனுமதிக்க முடியாது, ஆனால் பெண்கள் தனியாக படிக்க எந்த தடையும் விதிக்கப்படாது என அவர் கூறினார்.

logo