Header

ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையில் வடகொரியா…!

 

வடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய செய்தி முகமையான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பாதுகாப்பு அறிவியல் அகாடமி, செப்டம்பர் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது என்றும், இரண்டு வருடங்களாக ஆயுதங்கள் வளர்ச்சியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடகொரியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் விரோதப் படைகளின் இராணுவ சூழ்ச்சிகளை வலுவாகக் கட்டுப்படுத்தும் தடுப்பு  நடவடிக்கையாக இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியுள்ளது.

வார இறுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏவுகணைகள் 1,500 கிமீ தொலைவில் பயணித்ததாக தெரியவருகின்றது.

வட கொரியாவின் ஆய்வாளர் அங்கித் பாண்டாவின் கருத்துப்படி, இது நாட்டின் முதல் நீண்ட தூர பயண ஏவுகணையாக இருப்பதுடன் இது அணு ஆயுதத்தை கொண்டு செல்லக்கூடியதுடன் வட கொரியா இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு குரூஸ் ஏவுகணை சோதனைகளை நடத்தியது என்றும் கூறியுள்ளார்.

 

logo