Header

தலிபான்கள் வெற்றியால் உலகின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து…!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றியால், உல கின் பிற பகுதிகளிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுச் செயலர் “அன்டோனியோ குட்டரஸ்” செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெற்ற வெற்றியை பார்த்து, உலகின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து உள்ளதுடன்

உதாரணமாக, ஆப்ரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் பயங்கர வாத சவாலை எதிர்கொள்ளும் அளவிற்கு அங்கு பாதுகாப்பு கட்டமைப்பு இல்லை இதனால் இறப்பை நல்ல விஷயமாக கருதி எந்த சூழலிலும் உயிரைக் கொடுக்கும் கும்பல், அது சிறியதாகவே இருப்பினும், அதன் முன் இராணுவம் கூட நிற்க முடியாது.

இதை ஆப்கனிஸ்தான் சம்பவம் உணர்த்தியுள்ளது. ஏழு நாட்களில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் மாயமாகி விட்டனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பல நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பது கவலை அளிக்கிறது. அதனால், பயங்கர வாதத்திற்கு எதிரான நாடுகளின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும் என அவர் இவ்வாறு கூறினார்.

logo