Header

தடுப்பூசி அட்டையை பெற்றுக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாது நழுவிய சிலர் ….

 

கொரோனா தடுப்பூசியை தாங்களும் செலுத்திக்கொண்டோம் என்பதை காண்பிப்பதற்காக, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டையில், விவரங்களை பதிவு செய்துகொண்டு, தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாது நழுவிய சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு முறைக்கேடு செய்து, அவ்வாறு தப்பிச்செல்ல முயன்ற சிலரை ​பொலிஸார் கைது செய்துள்ளனர். சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று (09) முன்னெடுக்கப்பட்டது. சைனோஃபாம் முதலாம் மற்றும் இரண்டாம் டோஸ்கள் செலுத்தப்பட்டன.

அந்த மத்திய நிலையத்துக்கு வந்திருந்தவர்களில் சிலர், தடுப்பூசி அட்டைகளில் விவரங்களை பதிவுசெய்துகொண்டதன் பின்னர், தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாமல் நழுவிச்சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த அதிகாரியொருவர் அவதானித்து, பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில், முதலாவது தடுப்பூசியையும் செலுத்தாது இவ்வாறு நழுவிச்சென்றிருப்பார்களோ என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.