Header

கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய நியூசிலாந்து….திட்டம் .

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஸ்பெயினிலிருந்து பைஸர் கொரோனா தடுப்பூசியை நியூசிலாந்து இறக்குமதி செய்கிறது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ நியூசிலாந்தில் டெல்டா வைரஸ், ஓகஸ்ட்  மாதத்திலிருந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. மக்கள் தொகை நெருக்கம் கொண்ட  ஓக்லாண்ட்பகுதியில் கடும் ஊரடங்கு நிலவுகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் கொரோனா  தடுப்பூசியை விரைவாக செலுத்த நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஸ்பெயினிடமிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான பைஸர் கொரோனா  தடுப்பூசியை நியூசிலாந்து  இறக்குமதி செய்கிறது. இவ்வாரமே பைஸர் தடுப்பூசிகள்  வந்துவிடும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

 

logo