Header

பிளாஸ்ரிக் பொருட்களினால் ஒக்சிஜன் உருவாகிறது…!

அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடானது பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் நன்னீர் ஏரியில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்களால் அங்கு ஒக்சிஜன் அதிகரிக்கின்றது என விஞ்ஞானிகள் தெகண்டறிந்துள்ளனர்.

இதற்காக இங்கிலாந்தின் கினிபெர்ஸ்லே என்ற இடத்தில் (Ginipersley) உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களை நீர்த்தேக்கத்தில் கொட்டியுள்ளனர்.

அடுத்த ஆறு வாரத்தில் நீர்த் தேக்கத்தில் ஏரியின் அடியில் படியும் பிளாஸ்டிக் துகள்கள் நுண்ணிய பாசிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவை கார்பன் டை ஒக்சைட்டை மாற்றி ஒக்சிஜனாக உற்பத்தி செய்கிறது என கண்டறிந்துள்ளனர்.

logo