Header

தலிபான் அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு…!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ளதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

logo