Header

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 769 பேர் பூரண குணமடைவு…!

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆயிரத்து 769 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 88 ஆயிரத்து 278 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 949 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
மேலும் 10 ஆயிரத்து 320 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.