Header

உலக அளவில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 38 இலட்சத்தை கடந்தது!

 

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில், இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 33 இலட்சத்து 38 ஆயிரத்து 535 ஆக உயர்வடைந்துள்ளது. அதே சமயம் கொரோனா தொற்றினால் 44 இலட்சத்து 54 ஆயிரத்து 49 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 19.08 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.79 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.12 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

 

 

logo