Header

” காஞ்சனா3 ” திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை…!

 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான “காஞ்சனா 3” படத்தில் நடித்தவர் நடிகை “அலெக்ஸாண்ட்ரா”. இவர் அப்படத்தில்
ராகவா லாரன்சின் காதலியாக “ரோஸி” எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஷ்ய நாட்டை சேர்ந்த நடிகையும் மொடல் அழகியுமான இவர் கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அலெக்ஸாண்ட்ரா, கடந்த வியாழனன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

காதலரை பிரிந்ததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை அலெக்ஸாண்ட்ராவின் மர்ம மரணம் குறித்து கோவா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

logo