Header

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள்….

UNDP has the right to use image in perpetuiy. Photo: Viacheslav Lopatin/Shutterstock.com

 

நாட்டில் இதுவரை 12,919,193 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் 5,124,185 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய (19)  தினத்தில்,

சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின்
முதலாவது டோஸ் – 27,371
இரண்டாவது டோஸ் – 107,930 செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 874,747 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 159,088 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதோடு இரண்டாவது டோஸ் 14,525 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரை 253,946 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 42,701 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் 771,201 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

logo