Header

பாலியல் வழக்கில் நியூஜோர்க்  கவர்னர் ராஜினாமா – பொறுப்பேற்றார் பெண் கவர்னர்…!

 

அமெரிக்காவில் பாலியல் பிரச்சினையில் சிக்கிய, நியூஜோர்க் நகர கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த “ஆண்ட்ரூ குவோமோ” 11 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணை நடைபெற்று வந்தது, அப்போது கவர்னர் எந்த நேரத்தில் எந்த இடத்தில் தொடுவாரோ என அச்சத்துடன் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கவர்னர் மீதான வழக்கிற்கு ஆதாரம் உள்ளதாக, விசாரணை மேற்கொண்ட “அட்டர்னி ஜெனரல்” அரசுக்கு அறிக்கை அளித்தார்.

இதற்கிடையே “ஆண்ட்ரூ குவோமோ” பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர குடியரசு கட்சி முயன்றது. மேலும், ஜனநாயக கட்சி அமைச்சர்களும் ஆண்ட்ரூ பதவி விலக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் “ஜோ பைடன்” ஆண்ட்ரூவை அழைத்து, பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதன் விளைவாக “நியூஜோர்க்” நகர கவர்னர் பதவியில் இருந்து “ஆண்ட்ரூ குவோமோ” நேற்று விலகினார்.

இதையடுத்து, ஜனநாயக கட்சியின் முன்னாள் அமைச்சர் “கேதி ஹோச்சுல்” நியூஜோர்க்கின் 57வது கவர்னராக பொறுப்பேற்க உள்ளதுடன் முதல் பெண் கவர்னர் என்ற சிறப்பும் இவருக்கு கிடைக்க உள்ளது.

logo