Header

காடுகளின் பாதுகாவலன் தினம் இன்று…!

கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது.

ஆனால் உலகில் ஆண்டுதோறும் 35,000 யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2012 ஆம் ஆண்டில் இருந்து ஒகஸ்ட் 12 இல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பாக காடுகளின் பரப்பு குறைவது, யானைகளுக்கு தேவையான உணவு கிடைக்காமை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக யானைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கிறது.

இதனால் தான் சில நேரங்களில் காடுகளை விட்டு சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருகின்றன.

ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் தான் யானைகள் அதிகம் காணப்படுகின்றன.

ஆசியாவில் இருக்கக்கூடிய யானைகளில் 44 சதவீதம் யானைகள் இந்தியாவில் உள்ளன.

logo