Header

தடுப்பூசியின் அவசியம்…!

உலகம் முழுவதும் பல நாடுகளில் “டெல்டா” வகை கொரோனா அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசியை புறக்கணிப்பவர்கள் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்புள்ளது என “அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம்” தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உருவான எதிர்ப்பு சக்தி அதே வகையான கொரோனா மட்டும் மீண்டும் பாதிக்காமல் இருக்க உதவுகிறது.

ஆனால் மரபணு மாற்ற வைரஸ்க்கு இது பலனளிக்காது, எனவே கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மிக அவசியமாக இருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இறப்பு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

logo