
நாடுபூராகவும் லாப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லாப் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அநேகமான விற்பனை நிலையங்களில் “லாப் சமையல் எரிவாயு விற்பனைக்கு இல்லை” என எழுதப்பட்ட அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லாப் சமையல் எரிவாயுவுக்கு கடந்த ஒருமாதமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அந்த வகை சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் அநேக ஹோட்டல் துறையினர் உள்ளிட்ட பலர் பாரிய
அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, எரிபொருள் கொள்வனவுக்காக வரும் நுகர்வோர் வெறுங்கையுடன் திரும்பிப் போவதாகத் தெரிவித்த விற்பனைப் பிரதிநிதியொருவர், இத்தட்டுப்பாடு சில வாரங்களில் நீங்கும் எனநம்புவதாகவும் தெரிவித்தார்.