Header

வேகமாக ஓடும் ரோபோ…!

3d rendering robot running on racecourse in stadium

 

அமெரிக்காவிலுள்ள ஓரிகன் மாநில பல்கலைகழக வளாகத்திற்குள் 53 நிமிடங்களில் ஐந்து கி.மீ. தொலை தூரம் வரை ஓடிக் காட்டி இருக்கிறது “கேசி” என்ற ரோபோ.

ஓரிகன் ஆராய்ச்சியாளர்கள் நெருப்புக் கோழியின் கால்களை முன்மாதிரியாகக் கொண்டு “கேசி” என்ற ரோபோவை உருவாக்கி இருக்கின்றனர்.

கேசி ரோபோவிற்கு நடக்கும்போதே வேகத்தை அதிகரித்து ஓடவும், பின் வேகத்தை குறைத்து நடந்து செல்லவும் ஏற்றவாறு உருவாக்கி இருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக நடக்கவும், படிகளில் ஏறவும் பயிற்சி கொடுக்கப்பட்ட கேசியிற்கு, ஓடும் திறனைத் கொடுப்பதற்காக, இயந்திர கற்றல் மென்பொருளில் சிறப்பு நிரல்களை ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.

இந்த நிரல்கள் மூலமும் “ரிமோட் கென்ட்ரோல்” கருவி மூலம் கட்டுப்படுத்தியும் கேசி ரோபோ சமதள சாலைகளில் ஓடிக் காட்டி இருக்கிறது.

எனவே இதன் மூலம் எதிர்காலத்தில், டெலிவரி சேவைகளில் ஈடுபடுத்த “கேசி” ரோபோக்கள் உதவும் என இதன் படைப்பாளர்கள் நம்புகின்றனர். கேசியிற்கு இடுப்பு, கால்கள், சிறிய பாதங்களும் உண்டு.

இதன் இடுப்புப் பகுதியில் ஒரு பெட்டியை பொருத்தினால், அதில் சில துாதஞ்சல்கள், பொருட்கள் வைத்து அனுப்ப முடியும்.

இந்த ரோபோக்கள் வாகனத்திலிருந்து இறங்கி, வீட்டு வாசலுக்கு போய் பொருட்களை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிடும் திறமையுடையதாக காணப்படுகிறது.

 

logo