Header

நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்ட 300 அடி குளிரூட்டும் கோபுரம்!

 

இங்கிலாந்தில் பயன்பாடின்றி இருந்த மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் நொடிப்பொழுதில் வெடிவைத்து தடைமட்டமாக்கப்பட்டன. 8 பிரம்மாண்ட குளிரூட்டும் கோபுரங்களைக் கொண்ட எக்போரௌ (Eggborough) மின் நிலையம் 50 ஆண்டுகளுக்கு மேலாக யோர்க்ஷைர் (YorkShire) அடையாளமாக விளங்கியது.

பல ஆண்டுகளாக மின் நிலையம் பயன்பாடின்றி இருந்ததால் அதன் ஒரு பகுதியை மறுக்கட்டமைப்பு செய்வதற்காக 4 குளிரூட்டும் கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. 300 அடி உயர கோபுரங்கள் ஒரே சமயத்தில் தகர்க்கப்பட்டதனால் வானுயரப் புழுதி எழும்பியுள்ளது.