Header

பேருந்தை துரத்திச்சென்ற யுவதி பலி…!

 

திருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை வேலைக்குச் செல்வதற்கான பேருந்தை தவறவிட்டதால் அந்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற நிலையிலேயே மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

logo